Page Nav

HIDE

Breaking News:

latest

இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள நான்கு மீனினங்கள் வலைகளை உண்ணும் புதிய நண்டு வகைகள்

 இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ள நான்கு மீனினங்கள் வலைகளை சேதப்படுத்தும் புதிய நண்டு வகைகள் மன்னார் மீனவர் கூட்டுறவு சங்கங்களின் சமாசச் செயலாள...

 இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ள நான்கு மீனினங்கள் வலைகளை சேதப்படுத்தும் புதிய நண்டு வகைகள் மன்னார் மீனவர் கூட்டுறவு சங்கங்களின் சமாசச் செயலாளர் முஹமட் ஆலம் புதிய தகவல்


இலங்கையில் நான்கு வகையான மீன்களை பிடிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாகவும்  புதிதாக வந்துள்ள ஒரு வகையாண நண்டுகள் மீனவர்களின் வலைகளை  பாவிக்க முடியாதவாறு சேதப்படுத்துவதாகவும்  மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்கங்களில் சமாச செயலாளர் முஹமட் ஆலம் அவர்கள் தெரிவித்துள்ளார்

இந்த விடயம் தொடபில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

அண்மையிலே கடல் தொழில் அமைச்சினால் தடை செய்யப்பட்ட  நான்கு வகையான மீன் இனங்களின் பெயர்கள் குறிப்பிட்டு அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது அவை  இலங்கை கடற்பரப்பில் இல்லாது வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட கடல் வாழ் உயிரினங்கள் என அறிய முடிகிறது  இவ்வகையான மீன் இனங்களால்  அப்பகுதியில் வாழும் ஏனைய  மீன் இனங்களுக்கும்  கடல் வாழ் உயிரினங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது


இதற்கு அமைய மீனவர்கள் இந்த விடயத்திலே விற்பனை செய்யக்கூடிய அல்லது அலங்கார மீன்களை கொள்வனவு செய்வதற்காக  அதனை கடலில் பிடிக்கின்றவர்கள்  அவற்றில்  கவனம் செலுத்தி அரசுக்கும் மீனவ சமூகத்திற்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பது மீனவ சமூகமாகிய எங்களுடைய  வேண்டுகோளாக உள்ளது  

இவற்றில் கத்தி மீன் பாம்பு தலை மீன்  முதலைக் கால் மீன்  பிரண்டா(ஹா) மீன் போன்ற மீன் இனங்கள்  என்று அறிய முடிகிறது 

மேலும் மன்னார் கடல் பகுதியில் ஒரு புதிய வகை நண்டு இனம் ஒன்று மீனவர்களின் வலைகளை சேதப்படுத்துவதாக மீனவர்கள் ஊடாக அறிய முடிகிறது அந்த நண்டிடம் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன் இந்த கடல் பகுதியில் காணப்பட்டதாகவும் நாளடைவில்  அது அழிவடைந்து காணப்பட்ட நிலையில் மீண்டும் அந்த நண்டினம் உருவாகி  வலைகளை  சேதப்படுத்துவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளார்கள்  குறித்த  நண்டானது  வலைகளை சேதப்படுத்தி மென்று திண்று விடுவதாகவும்  விடுவதாகவும் அல்லது சிறிது நேரத்தில் அந்த வலைகள் பஞ்சு போல ஆகி விடுவதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றார்கள்


இந்த நண்டானது மன்னார் தொடக்கம் தாழ்வுபாடு எருக்கலம்பிட்டி அரிப்பு போன்ற பகுதிகளில் பெருவாரியாக காணப்படுகின்றது அந்த நண்டின் பெயரை கடந்த பதினைந்து வருடங்களுக்கு முன்னர்  மல்லக்காவட்டி என்று அழைக்கப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளார்கள்  

இந்த விடயத்தில் கடல் தொழில் அமைச்சும் நாரா நிறுவனமும்  கவனம் செலுத்த வேண்டும் இந்த நண்டு இனத்தையும்  ஏற்கனவே தடை செய்யப்பட்ட  அந்த நான்கு வகையான மீன் இனத்தோடும் இதுவும் உள்வாங்கப்பட வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும்

இந்த நண்டு இனம் தொடர்பாகவும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்  ஆய்வுக்கு பின்னால் இந்த நண்டு பொருத்தமற்றது என உறுதி செய்த பின்னர் இவற்றை அழிப்பதற்கு அல்லது  இலங்கை கடற்பரப்பிலிருந்து அப்புறப்படுத்துவதற்கு அதற்குரிய வேலைகளை செய்ய வேண்டும் என்பது எமது வேண்டுகோள் என்று மன்னார் மாவட்ட மீனவ சங்கங்களின் சமாச செயலாளர் முகமட் ஆலம்  அவர்கள் தெரிவித்தார் 

No comments